Post navigation மதுரை மாநகர் திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளில் மதுரை மாநகர திமுக சார்பில் வடக்குமாசி வீதி- மேலமாசிவீதி சந்திப்பு பகுதியில் இருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு மாநகர் திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி MLA தலைமையில் , மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் வெண்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மேயர் இந்திராணிபொன்வசந்த் , தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் உட்பட ஏராளமான பங்கேற்றனர். அகில இந்திய பி எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான மாநிலம் தழுவிய கபாடி போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய பள்ளி மாணவிகளுக்கு மதுரை ரயில்வே சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.