Post navigation மதுரை பாரபத்தியில் த.வெ.க., 2வது மாநில மாநாடு இன்று (ஆக.21) மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. முதல் நிகழ்வாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சித்தலைவர் விஜய் கொடியேற்ற திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு கொடிக்கம்பம் நிறுவும் போது, கம்பம் சரிந்ததில் நுாறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி ஒருவரின் காரின் மேற்பகுதி இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. திடீர் சாம்பார் திடீர் பாஸ்ட்புட் மாதிரி விஜய் நேரடியாக கோட்டைக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி