Post navigation விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் பயின்று பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்து கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது இடஒதுக்கீடு தொடர்பாக தவறுதலான பதிவினால் கல்லூரியில் பயிலமுடியவில்லை என கூறி பாதிக்கபட்ட மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்கோரிக்கை மனு அளித்திருந்தார். மாணவியின் மனுவின் மீது மின்னல் வேகத்தில் ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்முகாம் நடைபெற்றது.