திருச்சி விமான நிலையத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், விசாரணை கமிஷன் அதிகாரி கரூர் விரைந்தனர்.கரூரில் நடைபெற்ற விஜயின் பரப்புரையில் கூட்டத்தில் சிக்கி 35க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க சனி கிழமை நள்ளிரவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.இதனை தொடர்ந்துநேற்று காலை முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மேலும் மரணத்தை குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றனர்.

ByHari haran

Sep 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed