Post navigation இன்றைய காலகட்டத்தில் கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் என நடிகரும் ,தயாரிப்பாளுருமான அருண்பாண்டியன் தெரிவித்தார். கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.