Category: கோயம்புத்தூர்

சிந்தி சர்வதேச பள்ளி,கோவை ராம் நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சாய் சிட்டி இணைந்து பல்துறை சிறப்பு மெகா உடல்நல பரிசோதனை முகாமை கோவை தடாகம் சாலையில் உள்ள சிந்தி சர்வதேச பள்ளியில் நடைபெற்றது

https://youtu.be/A5gP7WWvXLI

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மாமன்ற கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக பேசியது என்னவென்றால் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கு பணி நேரங்களில் நடக்கும் வாக்கு வாதங்கள் அதில் பெறும் பாலும் பாதிக்கப்படுவது தூய்மைப் பணியாளர்கள் தான் அவர்கள் மன உளைச்சல் ஏற்படும் படி பணி நீக்கம், பணிமாறுதல், பணிச்சுமை போன்ற சிறு காரணங்களுக்காக பணியிடை நீக்கம் வரை‌செல்ல வேண்டிய அவசியம் இல்லை தூய்மைப் பணியாளர்களின் பணி மிகச் சிறந்த அர்ப்பணிப்போடு செய்யும் ஆகச் சிறந்த பணி முடிந்தவரை அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை மனம் உளைச்சலுக்கு ஆளாக்கி விடாதீர்கள். என்றும் பேசியுள்ளார்.

https://youtu.be/LVQYxWcOKJM

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான கூட்ட அரங்கான விக்டோரியா அரங்கில் நடைபெற்ற நிலையில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து குப்பைகள் கொண்டு வந்து கொட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வெள்ளலூர் குப்பை கிடங்கை வைத்து மாநகராட்சி நிர்வாகம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுவதாகவும் கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹால் முன்பாக கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

https://youtu.be/LKaS1LSKAp4

கோவை கே.என்.ஜி புதூரில் அமைந்துள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

https://youtu.be/6jWb27Npn5s

You missed