Post navigation மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்துவரி முறைகேட்டில் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். கிறிஸ்தவ கொள்கை திராவிட கொள்கைக்கு பெரிய வித்தியாசம் கிடையாது – சமத்துவத்தை அடுத்தவரிடம் போதிக்க வேண்டும் என்று தான் இரண்டும் வலியுறுத்துகிறது – மதுரையில் நடைபெற்ற கிறிஸ்தவ விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு