Post navigation புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த பொழுது புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம், பல்லவராயன்பத்தை பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியில் இருந்த பணிப்பெண்களை சந்தித்து அவர்கள் குறை நிறைகளை கேட்டு அறிந்து உடனடியாக ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr. வை. முத்துராஜா புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் கணக்கன்காடு ஊராட்சி வெட்டன்விடுதி பரவக்கோட்டையான் தெருவில் வசித்து வரும் குமரேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை gas சிலிண்டர் வெடித்து வீடு முற்றிலும் சேதமடைந்தாக செய்தி அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு தாசில்தார் VAO உள்ளிட்ட அரசு அதிகாரிகளை வரவழைத்து, அரசின் சார்பாக ஏற்பாடு செய்யவேண்டிய இழப்பீடு மற்றும் நிவாரணங்களை உடனடியாக வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். முத்துராஜா