Post navigation திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தீக்குளித்து உயிரிழந்த பூரண சந்திரன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவரை வாசலில் பாஜக சார்பில் கோஷங்களில் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை சுற்றிலும் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் மற்றொரு பாஜக பிரிவினர் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எதுவும் எழுப்ப வேண்டாம் முடிவு செய்து மௌன போராட்டம் தொடங்கி இருக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும், காசி விசுவநாதர் ஆலயத்திற்கு பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்ணகி வேடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த திருநங்கை மற்றும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்புகளை தரையில் போட்டு உடைத்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.