Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், விசாரணை கமிஷன் அதிகாரி கரூர் விரைந்தனர்.கரூரில் நடைபெற்ற விஜயின் பரப்புரையில் கூட்டத்தில் சிக்கி 35க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க சனி கிழமை நள்ளிரவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.இதனை தொடர்ந்துநேற்று காலை முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மேலும் மரணத்தை குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றனர்.

https://youtu.be/SArx840kFr8?si=sQfdd4z_EYyyTXC_

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கும் விவகாரம், புகார் செய்த விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அச்சப்பட்டு பேசிய விவசாயி, தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று வேதனை தெரிவித்தார் :-

https://youtu.be/yh1JNctmlFs

கல்லூரி மாணவ ,மாணவிகள் ரூபாய் 1000 மாதம் கல்விஉதவி தொகைபெற திருவாரூர் மாவட்டஆட்சியர், சட்டமன்றஉறுப்பினர் ஏடிஎம் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் அருகே கல்லூரியில் நடைபெற்றது …

https://youtu.be/lf6H9dzmUtY

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்..

https://youtu.be/lxYh9OwNxUA

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டம்…

https://youtu.be/vc33V35voFE

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சத்தில், புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 33 உசிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள அய்யனார்திடலை சீரமைத்து விளையாட்டு வீரர்களுக்கு மேற்கூரை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டின் பணிகளை துவக்கி வைத்தார்

https://youtu.be/nvKlwto1vLE

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள் மாவட்ட மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செவிலியர் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாகவும் தரமான மருத்துவம் இல்லை எனவும் மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக போக்கி செவிலியர்கள் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் தரமான மருத்துவம் தருவதை தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரி பாரதிய ஜனதா கட்சியினர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

https://youtu.be/55SqUjlZktQ

You missed