Month: September 2025

தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன், அதுவும் ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள். குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்பது விதி, உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? விஜய் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது இதனால் சந்தேகம் இருக்கிறது. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய்.

https://youtu.be/txYqxorDNOQ?si=EdaOwSAiSs5f3Oyz

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு

https://youtu.be/K8E6_zw9YtI?si=rn_g55AIP2g8WA-u

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா திருப்புனவாசல் காவல் துறைக்கு உட்பட்ட சாத்தியடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி தற்கால ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு

https://youtu.be/nJWqpgDv9Ds?si=GV1Jq8BQ_c6c0dck

தமிழ்நாட்டில் பெப்சி கொக்கோகோலா போன்ற அந்நிய நிறுவனங்களில் குளிர்பானங்கள் விற்பனை செய்வதை நிறுத்துவதற்கு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அது நடைமுறைக்கு வரும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

https://youtu.be/B3HDPUEL1-8?si=2K1T3pmEPC4MSUsj

கரூர் விபத்து தமிழக மக்களிடையே மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது – சட்டையில் கருப்பு கொடியேந்தி மௌன அஞ்சலி -சீமான் சமீப காலமாக மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் – அதிமுக தலைவர்கள் குறித்து தரக்குறைவாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – சீமானுக்கு கண்டனம் – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

https://youtu.be/4l_fiQP1_a0?si=GW-VhndRXpubDkuT Oplus_131072

திருச்சி விமான நிலையத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், விசாரணை கமிஷன் அதிகாரி கரூர் விரைந்தனர்.கரூரில் நடைபெற்ற விஜயின் பரப்புரையில் கூட்டத்தில் சிக்கி 35க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க சனி கிழமை நள்ளிரவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.இதனை தொடர்ந்துநேற்று காலை முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மேலும் மரணத்தை குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றனர்.

https://youtu.be/SArx840kFr8?si=sQfdd4z_EYyyTXC_

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கும் விவகாரம், புகார் செய்த விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அச்சப்பட்டு பேசிய விவசாயி, தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று வேதனை தெரிவித்தார் :-

https://youtu.be/yh1JNctmlFs

You missed