Post navigation கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடி கீர்த்தியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி எள் தண்ணீரை காவிரியில் விட்டு மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பளம் செய்தனர்.