Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டுக்கோட்டை அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் இணைந்து இன்று கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் – பொதுமக்களுடன் இணைந்து உறுதி மொழியும் ஏற்போம்

https://youtu.be/GUh84sdC4dE

கோவை காந்திபுரம் சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

https://youtu.be/0KhI-tc87hQ

கொங்கு மண்டல பகுதிகளில் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த வணிகம் அதிகரிக்க கூடுதல் வசதிகள் செய்யப்படுவதாக சென்னை துறைமுக ஆணையம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றின் தலைவர் சுனில் பாலிவால் தகவல்

https://youtu.be/EY66NVCqkw4

கோவையில் 29 ஆம் ஆண்டாக நடைபெற்ற தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

https://youtu.be/-x0t3BocOJ8

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதிகளில் திருட்டு போன மற்றும் தொலைந்து போன 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

https://youtu.be/yofCHvsGFTQ

புதிதாக கட்டப்படும் பெரியார் நூலகத்தில் வைத்து இருக்கும் கண் திருஷ்டி பொம்மையை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்துள்ளனர்

https://youtu.be/FUdXtlCYem0

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்குபோதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது குமுளி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாட்ராயன் மற்றும் தலைமை காவலர் மாரியப்பன் அவர்களால் நடத்தப்பட்டது. இந்த போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.மேலும், இந்த நிகழ்வை நடத்திய குமுளி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாட்ராயன் மற்றும் தலைமை காவலர் மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

https://youtu.be/CLLIU9cHDKQ

You missed