Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் பயின்று பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்து கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது இடஒதுக்கீடு தொடர்பாக தவறுதலான பதிவினால் கல்லூரியில் பயிலமுடியவில்லை என கூறி பாதிக்கபட்ட மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்கோரிக்கை மனு அளித்திருந்தார். மாணவியின் மனுவின் மீது மின்னல் வேகத்தில் ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

https://youtu.be/YzqC_rmqteU

தாளம்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரவேண்டும் எனவும் தங்களுடைய கிராமம் அரசு பதிவேட்டில் இருந்து மறைக்கப்பட்டு விட்டதாக பரபரப்பு புகாரை வழங்கிய கிராம மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா தாளம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர்

https://youtu.be/sMwAqCBWkyU

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் படுகாயம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு

https://youtu.be/LW8EfjNbsSM

பீகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் , தமிழ்நாட்டிலும் தவறுகள் நடக்கிறது , இவை எல்லாவற்றையும் தேர்தல்ஆணையமும் , நீதியரசரும் சரிசெய்யவேண்டும் என திருவாரூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் பேட்டி …

https://youtu.be/KbT-jIJWVzs

You missed