Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

ஆண்டிபட்டி அருகே மலை கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது – புகார் அளித்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/cuQYBlDbGq0

நெல்லை இன்று சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் 220வது நினைவு நாளை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி நெல்லை மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் வைத்து தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

https://youtu.be/co3Srf_zU1A

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவாரூரில் ஆறு , குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் விவசாயம் , குடும்பத்தினர் , கல்வி, தொழில் உள்ளிட்டவை பெருகி வளம்பெற பெண்கள் வழிபட்டனர் …

https://youtu.be/Jk98augYceU

ஆடிப்பெருக்கு விழா திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி கொள்ளிடம் கரையோரங்களில் காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்தி புதுமண தம்பதியினர், பெண்கள், பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்..

https://youtu.be/ACywK1n9D5Q

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் புனித நீராடி காப்பரிசி, காதோலை கருகமணி, மாங்கல்யம் வைத்து பூஜை செய்து வழிபட்டு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று தங்கள் திருமணம் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.

https://youtu.be/u6efLBdP8c0

You missed